திருமதி. மகேஸ்வரி திருநாவுக்கரசு (பாக்கியம்)

மலர்வு

19.09.1942

உதிர்வு

26.11.2021

கொக்குவில் – பிரித்தானியா

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

திரு.திருமதி கதிரவேலு தம்பதிகளின் அன்புமருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு (VKT – பிரபல தொழிலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜரட்ணம் மற்றும் சாம்பசிவம், நல்லம்மா, தேவராஜா, சொர்ணலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

திருச்சாந்தி (பிரித்தானியா), திருச்சிவம் (பிரித்தானியா), திருக்குமார் (பிரபல தொழிலதிபர் – கனடா), திருஞானம் (பிரித்தானியா), திருச்செல்வி (பிரித்தானியா), திருக்கேதீஸ்வரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவபாலன் (பிரித்தானியா), இரஞ்சிதவதனி (பிரித்தானியா), சுதர்விழி (கனடா), அருள்செல்வி (பிரித்தானியா), அற்புதராஜா (பிரித்தானியா), தவராஜினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதுர்சன், Dr.யட்சன் (UK), கவின், கவிதா, கபில், திமோத்தி (சட்டத்தரணி – கனடா) , Dr.தனிஷா (கனடா), தனிக்கா, திகர்ணன், தியாணி, அஜேன், டெசியா, திசோக், திவ்யன், தஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
திருக்குமார் (மகன்) – 0014167267748

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro