பேராசிரியர் திரு. கனகசபாபதி நாகேஸ்வரன்

மலர்வு

05.08.1952

உதிர்வு

14.12.2021

நயினாதீவு – கொழும்பு

(ஓய்வு நிலை பேராசிரியர் – இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம், மரபுவழி அறங்காவலர் – நயினை ஸ்ரீ நாகபூசணி கோவில், முன்னாள் இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளர்)

நயினாதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு – 06 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி – கோகிலாம்பாள் தம்பதியரின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் – பூமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

ரதிமலர்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஷ், குருபரன், தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காயத்ரி, தாட்சாயினி, குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயலட்சுமி, சுந்தரேஸ்வரன், கனகலட்சுமி, மதிவதனி, மேனகா, ரேணுகா, கலைவாணி, நவநீதன் ஆகியோரின் மூத்த சகோதரரும்,

காலஞ்சென்ற ராமஜெயம், சாந்தினி, மாசிலாமணி, பாலேந்திரா, அம்பிகைபாகன், ஹரிஹரன், காலஞ்சென்ற வரதராஜா, ஊர்மிளா, விமலாதேவி, ஜெயரட்னராஜா, காலஞ்சென்ற ஜெகநந்தராஜா, புவிமளாதேவி, காலஞ்சென்ற ஜெயபாலராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேயோன், திவ்வியன், ஓவியன், ஓவியா, னியா ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16.12.2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி,
பிள்ளைகள்,
மருமக்கள்.

தொடர்புகளுக்கு:
பிரகாஷ் (மகன்) : 0774742106

Share This Post

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro