ஏழாலை – யாழ்ப்பாணம்
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா ராஜன் கைலையங்கிரி (ராசன்) நேற்று (18.12.2021) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற முருகையா – அற்புதம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மோகனாவின் (ஆசிரியர் – ஏழாலை லெனின் மழலைகள் கல்விப் பூங்கா) அன்புக் கணவரும்,
துர்க்கா (கல்வியற் கல்லூரி, களுத்துறை தர்க்கா நகர்), தர்சிகா (யாழ். பல்கலைக்கழக விவசாய பீடம்), பிரவீனனன் (பழைய மாணவன், யாழ். இந்துக் கல்லூரி), கார்த்திகா (மாணவி, யா/வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை), ஆகாஷ் (மாணவன், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விவேகானந்தனின் (பொலிஸ் உத்தியோகத்தர் – கிளிநொச்சி) அன்பு மாமனாரும்,
அகிலேஸ்வரன் – ஜெயமணிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனஞ்ஜெயன், ஆதித்தன், பாலேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நிறைஞ்சனா, றூபனா (கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு), மோகனராஜ் (பிரதேச செயலகம், நெடுந்தீவு), ரூபனராஜ் (தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை), உமா, சத்தியா (யா/வயாவிளான் மத்திய கல்லூரி), கெலேனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.12.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக உசத்தியோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.