கரம்பன் கிழக்கு – யாழ்ப்பாணம்
கரம்பன் கிழக்கை பிறப்பிடமாகவும் இல.146, பாங்ஷல் வீதி, யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வலன்ரீனா (ராணி) ஜோண்கிங்சிலி அவர்கள் கடந்த (31.12.2021) வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிங்கராயர் – மேரிஜோசப்பின் தம்பதியரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான முடியப்பு – ரோசமுத்து தம்பதியரின் மருமகளும்,
ஜோண்கிங்சிலியின் (ஆனந்தராசா – ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவேர்ஜினி (கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
டன்ஸ்ரன் (கனடா) அவர்களின் மாமியாரும்,
கிஷானி (கனடா) அவர்களின் அன்புத் பேர்த்தியும்,
பிரான்சிஸ்கம்மா (விமலா – கனடா), ரோஸ் செலஸ் ரீனா (ராஜகுமாரி – கனடா), அந்தோனிப்பிள்ளை (கொலன்ட்), சிறில் (சிறி – கனடா), மாகிறேற் (ராஜினி – கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சேவியர் மற்றும் ரெஜினா (மணி), கிளாறா (மலர்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் (06.01.2022) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொஞ்சேஞ்சி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
021 222 7871