காரைநகர் – யாழ்ப்பாணம்
காரைநகர் புதுறோட்டு சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டு சிவன் கோவில் வீதியை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி அவர்கள் கடந்த (19.01.2022) புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா – இராசம்மா தம்பதியரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் பரமநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் மருமகளும்,
தனபாக்கியம் (Germany), சிவசுப்பிரமணியம் (பொம்பே மணியம், இலங்கை), சிவலிங்கம் (U.K), சிவராசா (U.K), தவராசா (U.K), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலஸ்காந்தன் மற்றும் பூமலர், வளர்மதி, அருந்ததி, அஜந்தி ஆகியோரின் அருமை மாமியாரும்,
பார்த்தீபன் (U.K), தர்சினி (Australia), தர்சிகரன் (U.K), சிவஅன்பு (U.K), சிவகரன் (U.K), துஷ்யந்தினி (U.K), சிவதீபன் (U.K), அபிராம் (U.K), ஆதிசன் (U.K), அபிதன் (U.K), திவிதன் (U.K), ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
லக் ஷா, சேயோன் (Australia) ஆகியோரின் அருமைப்பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பரமநாதன், தம்பிராசா மற்றும் சடாசிவம், மாணிக்கம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னையா கணபதிப்பிள்ளை, நடராசா மற்றும் பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் (23.01.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு நடைபெற்று, தகனக்கிரியைக்காக காலை 9.00 மணிக்கு சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு :
தனபாக்கியம் – 015143459523 (ஜேர்மனி)
சிவசுப்பிரமணியம் – 0752399555 (இலங்கை)
சிவலிங்கம் – 07956591653 (லண்டன்)
சிவராசா – 07860870571 (லண்டன்)
தவராசா – 07951956843 – (லண்டன்)