திரு. வீரகத்திப்பிள்ளை இராமநாதன்

மலர்வு

16.06.1957

உதிர்வு

27.01.2022

கிளிநொச்சி – புளியம் பொக்கணை

(கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய பூர்வீக தர்மகத்தாவும் முன்னாள் தலைவரும்)

கிளிநொச்சி பழைய கமம் முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், புளியம் பொக்கணை நாகதம்பிரான் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 27.01.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை (ஐங்கரப்பிள்ளை, கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய பூர்வீக தர்மகத்தாவும் பிரதம பூசகரும்), பரமேஸ்வரி (அருணாசலம் உடையாரின் மகள்), சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற முருகேசு (உடையார்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா (லண்டன்), நிஷந்தா (புளியம் பொக்கணை), ரேணூகா (பிரான்ஸ்), நிலாஜினி (பெரியகுளம்), பிரியதர்சினி (புளியம் பொக்கணை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதீஸ்குமார் (லண்டன்), சுபாஸ்கரன் (அவுஸ்திரேலியா), கோடீஸ்வரன் (பிரான்ஸ்), சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் (ஸ்ரீஐயா வன்னி பிராந்திய குருமார் ஒன்றியத் தலைவர்), இராகவன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலகிருஷ்ணன் (லண்டன்), ஜெகதீஸ்வரன் (லண்டன்), நாகேஸ்வரி (ஆசிரியர் கிளி (பாரதி வித்தியாலயம்), காலஞ்சென்ற ரஞ்சித்குமார், தயதீஸ்வரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுப்பிரமணியம் (வரணி), சிவராசா (பிரான்ஸ்), காலஞ்சென்ற நடராசா, கமலாம்பிகை (லண்டன்), புஸ்பராசா (சுவிஸ்), ஜெயராசா (வரணி), ஆனந்தராசா (வரணி), உதயராசா (லண்டன்), மீனாம்பிகை (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலக் ஷன், பதுஷனன், கவிஷ்ணன், மதுமிஷா, கிஷோர், தருணிகன், ஸ்ரீ பிரணவன், ஸ்ரீ வைஷ்ணவன், ஸ்ரீ அபிஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று இன்று (30.01.2022) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2:00 மணியளவில் புளியம் பொக்கணை நெடுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஜெகதீஸ்வரன் (சகோதரன்) 00447468601547

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro