திரு. யோசப் பிரான்சிஸ்

மலர்வு

உதிர்வு

நாவாந்துறை – நாவாந்துறை

(கலைக்குரிசில், சமூக திலகம்)

நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் – பிரான்சிஸ் (கலைக்குரிசில், சமூக திலகம்) கடந்த 08.02.2022 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலு யோசப் – அனாசி ரட்ணம் மண இணையரின் அன்பு மகனும்,

வைத்தி இன்னாசி – சொர்ணம்மா மண இணையரின் அன்பு மருமகனும்,

பிறதர் சந்தியாவின் பெறாமகனும்,

தங்கமலர் மரியபுஸ்பம் அவர்களின் அன்புக்கணவரும் ,

செல்வி (நோர்வே), ஷகிலா (நோர்வே), அநுரா (யாழ்.பொது நூலகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரனி ஸ்ரீதர் (நோர்வே), யூலியஸ் நிமல் (நோர்வே), யசிதரன் (ஷால்பன் வீடியோ), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுலைன், சுபேட்ஸ், நிகிந், இன்பன்ரா, நிம்பிரான்சன் (நோர்வே), ஷால்பன், சரோன், சாய்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான யோசப் யேசுதாசன், அருளானந்தம், திரேசம்மா, லூர்த்தம்மா, குலமணி மற்றும் சந்தியோ ஆகியோரின் உடன் பிறப்பும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, ராசம், அந்தோனிமுத்து, பொன்ராசா, பூபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சலேற், அல்பிறற், பட்டுத்துரை, நசரேத், சந்திரா, பிளாஞ்சாட், மற்றும் இரஞ்சிதம் தறுமு, லீலா, ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மிக்கேல் நீக்கிலஸ், அல்பிறெட் சயினம்மா, சந்திரா ராசாத்தியம்மா, இறப்பியல் நீக்கிலஸ், பட்டுத்துரை மரியம்மா, அந்தோனிப்பிள்ளை பாக்கியராசா, மற்றும் நசரேத் லில்லி, தறுமு வசந்தமலர், ஆகியோரின் அன்புச்சகலனுமாவார்.

அன்னாரின் இறுதிப் பயணம் நாளை (12.02.2022) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இல. 6/5 மூன்றாம் குறுக்குத்தெரு வீதி, நாவாந்துறை வடக்கு, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு சென்.மேரிஸ் சனசமூக நிலையத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வின் பின்னர், புனித பரலோக மாதா ஆலயத்தில் இரக்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
077 066 6014,
077 326 6533

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro