திரு. சின்னத்துரை தவராசா

மலர்வு

01.04.1939

உதிர்வு

15.02.2022

கொம்மந்தறை – வல்வெட்டித்துறை

யாழ். கொம்மந்தறை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தவராசா அவர்கள் 15.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

யோகச்சந்திரன், யோகராஜா, பகீரதன், மேகலா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜனி, சிவகுமாரி, அனுசா, சுரேந்திரன், குகசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், துரைச்சாமி, சின்னராசா, இரத்தினம்மா, தம்பிராஜா மற்றும் சிவசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற குணரத்தினம், பண்டிதர் ச.வே பஞ்சாச்சரம், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, ஈஸ்வரி, வைகுந்தவாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவினன், அபிராமி, அஸ்வினி, கவினா, கோகீஸ், வர்ஷா, சாம்பவி, லக்ஷி, சாயினி, மோனிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஜய் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.02.2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொம்மந்தறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பகீரதன் (மகன்) – 00447735270243

Share This Post

Select your currency
EUR Euro