பலாலி தெற்கு – உரும்பிராய்
(இறைப்பாறிய ஆசிரியர் வயாவிளான் மத்திய கல்லூரி, மகாஜன கல்லூரி தெல்லிப்பளை. இறைப்பாறிய விரிவுரையாளர், பலாலி ஆசிரியர் கலாசாலை, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி)
பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.செல்லர் அருள்பிரகாசம் அவர்கள் 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லர் கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிங்கநாயகம் – ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,
கமலநாயகியின் பாசமிகு கணவரும்,
வித்தியன் (மாவட்ட சித்த மருத்துவமனை, மர்த்தனவியலாளர், முல்லைத்தீவு), பிரஜீத் (அதிபர், கொழும்பு சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம், பம்பலபிட்டி), பிரவீணா (முகாமையாளர், இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜினி (முகாமைத்துவ உதவியாளர், பிரதேச சபை, பருத்தித்துறை), மைதிலி (ஆசிரியர், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), அரவிந்தன் (சுகாதார திணைக்களம்), ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, முத்தாச்சிப்பிள்ளை, தங்கச்சிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம், மகாராஜா, பரராஜசிங்கம், செல்வநாயகி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஆத்மிகா, அபூர்வா, அதிசயா, ஆருதிக்கா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பாலாலி தெற்கு வசாவிளான் பூனையன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
0772209649
0777456110


