அராலி தெற்கு – யாழ்ப்பாணம்
அராலி தெற்கு காளிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரம் றினால்த் அவர்கள் 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் மகேந்திரம் – கிருஸ்ணகுமாரி தம்பதியரின் பாசமிகு மகனும்,
வாகீசன், கோபிநாத் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
வினுஸ்ரெல்லாவின் மைத்துனரும், சஸ்வித்தின் பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா – பொன்னையா மற்றும் சின்னத்தம்பி – பவளம் ஆகியோரின் பேரனும்,
ஐயாத்துரை – ரதிதேவி காலஞ்சென்றவரான குணரத்தினம் – வசந்தா, தேவராசா – பத்மாவதி, மோகன் – ஜெயகுமாரி மற்றும் இராசேந்திரம் – விஜயகுமாரி ஆகியோரின் பெறாமகனும்,
அமரர். இரத்தினம் – சிவமாலை, அமரர்.தேவராணி, அமரர்.சிறீ, விஜயஸ்ரீதரன் – வதனி, சிவா – தர்சினி, நிசாந்தன் – ராகினி, சுகந்தன் – பவானி, ஜெசிந்தன் – கௌரி ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மினங்குப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
நாகலிங்கம் குடும்பத்தினர்.
மற்றும் ஜேம்ஸ் விளையாட்டுக்கழகம்.