நெடுந்தீவு – பிரித்தானியா
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த மத்தியாஸ் யோசப் சின்னத்துரை (சித்த வைத்தியர், அதிபர்) மேரிதிரேஸ் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும்,
வேலுப்பிள்ளை கந்தையா (பிரித்தானிய இலங்கை ராணுவ எழுத்தர்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினம் (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி, மோகன்ராஜ், காலஞ்சென்ற தேவராகினி, வசந்தராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிக்கலஸ் லோயலா, சத்தியமதி, சிவரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாகீசன், விஷானி, மார்க், லூக், காவியா, கவின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்ற றூபி அல்பிரட், இ.ராஜசூரியர் (பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெயராசா, ஜெயரட்ணம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி ஒலிவியா, ஜெயசீலன் மற்றும் ஜெயபாக்கியம் (ஜேர்மனி), ஜெயமலர் (ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயந்திரா, ஜெனிற்றா (ஜேர்மனி), ஜெயசேகரா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அல்பிரெட், ஜெயராணி மற்றும் பற்ரிசியா (அவுஸ்திரேலியா), லெனிற்றா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, நடேசன் மற்றும் ஜெயந்திரன் (ஜேர்மனி), யோகவதி (ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வரட்ணம், திரேசா (சிங்கப்பூர்), காலஞ்சென்ற கோமதி குமாரசாமி, முத்தம்மா முத்துக்குமாரசாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
மோகன்ராஜ் (மகன்) – 00447502280190