திரு. சரவணை இரத்தினசிங்கம்

மலர்வு

03.04.1943

உதிர்வு

08.03.2022

ஏழாலை மத்தி – அச்சுவேலி தெற்கு

(CTB ரத்தினம்)

சிவகுருவீதி ஏழாலை மத்தியை பிறப்பிடமாகவும், முத்துமாரி அம்மன் வீதி, அச்சுவேலி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சரவணை இரத்தினசிங்கம் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணை அன்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரபாகரன் (சுவிஸ்), கபிலநந்தினி (ஹொலண்ட்), சசிகரன் (லண்டன்), தயாநந்தினி, சர்வாநந்தினி (பிரான்ஸ்), துர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயபிரகாசினி (சுவிஸ்), தவராஜசிங்கம் (ஹொலண்ட்), சிவசுபா (லண்டன்), அமிர்தசாகரம், பிரபு (பிரான்ஸ்), மோகனா, ரூபவரன், ஆதீஸ்வரி, செல்வச்சந்திரன், மோகனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டிலக்சன், நிக்ஷன், றியா, கம்சிகா, பிறின்ஸ், ஹர்ஷா, ஹரிகாலன், லக்சிகா, வினோஜிகா, வர்ஷன், பிரதிக்கா, சபிஸ்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, இளையதம்பி, நடராசா, புஸ்பரத்தினம் மற்றும் அருளானந்தம் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக முழங்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்
.

Share This Post

Select your currency
EUR Euro