யாழ்ப்பாணம் – இளவாலை
(ஓய்வுபெற்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உத்தியோகத்தர்)
யாழ்ப்பாணம், சென்.ஜேம்ஸ் இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பு லூக்காஸ் அவர்கள் 09.04.2022 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சவரி பிலிப்பு – பிலிப்பு மரியம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
பற்றிக் றெஜினா அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற றெஜினம்மா அவர்களின் அன்புக்கணவரும்,
அன்ரன் லியோ, வெனன்சியா மகி, மரீனஸ் ,யூஜின், அருட்பணி றெஜினியூட் அவலின் (OMI), கில்லறியன் பிளேசியஸ், யோசவ்வாசன் (தாதி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,
லெனாட் டண்ஸ்ரன், கிளாறிஸ் நிதாஞ்சனி (தாதிய உத்தியோகத்தர்), கோமி கனிஸ்ரா, சுரேகா, சாந்தினி (தாதிய உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 11.04.2022 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி இடம்பெற்று பின்னர் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
பிள்ளைகள்.
முகவரி :
சென்.ஜேம்ஸ் வீதி,
இளவாலை.