தெல்லிப்பழை – அளவெட்டி
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராசம்மா அவர்கள் 18.04.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இலட்ச்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா (முன்னாள் கனிஷ்ட அதிபர் அருணோதயாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிரஞ்சனி (இலங்கை), ஜெகநாயகி (டென்மார்க்), செல்வவிநாயகன் (நோர்வே), சிறிகாந்தன் (இலங்கை), கருணாகரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பழனிவேல், வெற்றிவேல், அருணாசலம், வள்ளியம்மை, தெய்வநாயகி மற்றும் பாலசுப்பிரமணியம், சிவசுப்பிரமணியம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்கந்தேஸ்வரன் (இலங்கை), பத்மநாதன் (டென்மார்க்), ஜீவராணி (நோர்வே), திராவிடமலர் (இலங்கை), மீரா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, செல்லம்மா, கனகம்மா, சிவலட்சுமிதேவி, சிவசுப்பிரமணியம், அரியராசா மற்றும் சிவபாக்கியம், சத்தியதேவி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விசித்தா – சிவகாந்தன், சுதாகரன் – ஜலஜாயினி, கஜானன்- அம்ஷலா, ரகுவரன் – கீற்ர, சிறிலக்சனா – யதுரன், பவன், இலக்சன், பங்கஜன், பிரதீஷ், திவாம்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லதுர்சன், நயனிகா, தேஜஷ்வி, ரேஷ்மன், மாத்தா எல்வினி, அகத்தா எல்வினி, மாயா லக்ஸ்மி, லியா லக்ஸ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20.04.2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கருணாகரன் (மகன்) – 00447733263356
070 164 9218