திருமதி. இராஜேஸ்வரி மகேஸ்வரன்

மலர்வு

22.06.1945

உதிர்வு

17.04.2022

கரணவாய் – பிரித்தானியா

(BscHons(Chemistry)(Ceylon), PhD, Emeritus Professor in Chemistry, Former Head, Dept. of Chemistry and Former Rector(09.04.2003 to 10.04.2006), Vavuniya Campus, University of Jaffna)

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Maidenhead ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகேஸ்வரன் அவர்கள் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (தலைமை ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் செல்வ புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேராசிரியர் மகேஸ்வரன் (Dean Science Faculty- University of Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரன் (பிரித்தானியா), இராஜநாயகம் (பிரித்தானியா), இராஜகோபாலன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன், சுதந்திரேஸ்வரன், இராஜேஸ்வரன், சிவனேசரட்ணம் குணரட்ணம் மற்றும் சிவனேசராணி பத்மனேசன் (கொக்குவில்), சிவனேசமலர் ஜெயபாலன் (கொக்குவில்), சிவனேசஜோதி சிவானந்தராஜா (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
வீடு (குடும்பத்தினர்) – 00447860518621

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro