அராலி கிழக்கு – அராலி
நித்தியானந்தம் ஜின்சன் நேற்று ( 21.04.2022) புதன்கிழமை இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஜேம்ஸ் விளையாட்டுக்கழகத்தினரும், அராலி, ஆவாரம்பிட்டி, முத்துமாரி அம்பாள் 7ஆம் திருவிழா உபயகார்களும் அதிர்ச்சியில் உறைந்து விட்டோம்.
அமரர், ஜேம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கால்பந்தாட்ட நடுகள வீரரும், கழக வீரர்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஒருங்கிணைப்பாளரும், போட்டிகளின் வெற்றி – தோல்விகளில் வீரர்களுக்கு அறிவுரை கூறும் ஜேம்ஸ் கழகத்தின் அதிசிறந்த முன்னுதாரண நன்னடத்தை வீரருமாவார்.
ஆவரம்பிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய 7ஆம் திருவிழாவை முன்னின்று சக உபயகாரர்களுடன் சிறப்பாக வழிநடத்திய எமது பொக்கிஷத்தை இழந்து தவிக்கிறோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன், அவர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கிறோம்.
அத்துடன், அன்னாரின் புனித ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி… சாந்தி… சாந்தி…
உன் வேலைத்தன்மை கண்டு நாம் மகிழ்ந்தோம்
வீரத்தன்மையாய் கண்களை தானமாக்கினாய் வீரா
உன் சிறுநீரகத்தையும் தானமாக்கினாய் வீரா
எம் சக வீரரே உன் பொன்னான தானங்களுடன்
என்றும் நீ எம்முடன்
உன் பிரிவு துயரால் வாடும் :
அராலி தெற்கு, கிழக்கு ஜேம்ஸ்
விளையாட்டுக்கழகம்.
அராலி ஆவரம்பிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய
7ஆம் திருவிழா உபயகாரர்கள்.