பருத்தித்துறை – யாழ்ப்பாணம்
வேலாயுதம் சிவபாக்கியம் அவர்கள் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் (சின்னத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை (சின்னமுத்து) அவர்களின் அன்புச் சகோதரியும்,
தயாநிதி (தயா மாஸ்ரர்), சியாமளாதேவி, மஞ்சுளாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி (அதிபர் யா/புலோலி மெ.மி.த.க. பாடசாலை), பார்த்தீபன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மொறிஸ் (ஜேர்மனி), ராதை (ஜேர்மனி), ஆதித்யா (பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் பருத்தித்துறை சுப்பர்மட இந்து மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
தயாநிதி (மகன்)
(Dan Tv)
தொடர்புகளுக்கு :
075 3132 854