வவுனியா – மகாறம்பைக்குளம்
வவுனியா ஓமந்தை மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் புளியடி பிள்ளையார் கோவில் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா சிவகுமாரி அவர்கள் 27.04.2022 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா, யோகப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
செல்லையா சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
அனந்தகுமாரி (ஆனந்தி – ஜேர்மனி), நந்நகுமாரி (நந்தா – வவுனியா), கிருஸ்ணவேணி (அஜந்தா – பிரான்ஸ்), கஜேந்தன் (கஜன் – பிரான்ஸ்), நேருகா (நேரு – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜேந்திரன் (ஜேர்மனி), தங்கராசா (வவுனியா), சிவகுமார் (சிவா – பிரான்ஸ்), தனுகா (தனு – பிரான்ஸ்), சிறிகாந்தன் (சிறி – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவராசா (ஓமந்தை), சிவகுமார் (பிரான்ஸ்), தவகுமார் (வவுனியா), சிவஞானகி (லண்டன்), சிவமதி (வவுனியா), சிவமலர் (வவுனியா), சிவறஞ்சினி (ஓமந்தை), சிவதாஸ் (ஓமந்தை), காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, நாகராசா, கந்தசாமி மற்றும் கலாதேவி, சிவமலர், சுஜாதா (பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்லதுரை, ஜமுனா, சிவநாதன், குமரகுலசிங்கம், செல்வநாயகம், யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜதார்த்தனன், ஆர்த்திகா (ஜேர்மனி), சுரேன், விபீசனா (வவுனியா), சினேகா, கீர்த்திகா, அட்சிகா, அக் ஷன், நிவீனா (பிரான்ஸ்), அருநவி (பிரான்ஸ்), ஆருஷன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
கணவர்,
பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள்.