திருமதி. நாகரட்னம் விஸ்வலிங்கம்

மலர்வு

03.08.1935

உதிர்வு

30.04.2022

மானிப்பாய் – லண்டன்

யாழ். மானிப்பாய் தெற்கைப் பூர்வீகமாகவும், மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்னம் விஸ்வலிங்கம் அவர்கள் 30.04.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பர் பொன்னையா (விதானையார்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், அரியமலர், சுப்பிரமணியம், தர்மலிங்கம் மற்றும் மனோன்மணி (லண்டன்), சண்முகநாதன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பொன்னம்பலம், சச்சிதானந்தம், இராசபூபதி, அன்னலட்சுமி, அன்னப்பா, தங்கம்மா, திலவதி, பாலராஜா, கந்தமூர்த்தி மற்றும் யோகேஸ்வரி (சுவிஸ்), செலஸ்ரினா (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதாகரன் (பிரான்ஸ்), சிவாகரன் (பிரான்ஸ்), சுதாமதி (லண்டன்), அபயகரன் (லண்டன்), சுமித்திரா (லண்டன்), பிரபாகரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆனந்தரூபி (பிரான்ஸ்), பிரான்சுவாஸ் (பிரான்ஸ்), விஜயராஜா (லண்டன்), நர்மதா (லண்டன்), விக்னேஸ்வரன் (லண்டன்), மீனா (லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

அயிலோன், சிந்தியா, வினுசன், விஷ்வந், கௌசிகன், விபூதன், மெலனி, பிராஹ்மி, சதூசினி, அஸ்விதா, யோஹான், ஹரினி, திவ்வியன், சந்தோஷ், ஹஸ்மி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சுதாமதி (மகள்) – 00447478728252

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro