திரு. எஸ். ஏ. ஈ. ஏகநாதன்

மலர்வு

23.01.1943

உதிர்வு

28.06.2022

நயினாதீவு – காரைநகர்

(ஓய்வு நிலை மாவட்ட நீதிபதியும், சிரேஷ்ட சட்டத்தரணியும்)

திரு. எஸ்.ஏ.ஈ.ஏகநாதன் அவர்கள் கடந்த (28.06.2022) செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற இளையதம்பி – சிவபாக்கியம் தம்பதியரின் ஏக புதல்வரும்,

காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லதம்பி – விஜயலஷ்மி தம்பதியரின் மருமகனும்,

சகுந்தலாதேவியின் கணவரும்,

சிவானந்தா, காலஞ்சென்ற விஜயானந்தா மற்றும் ஜெயந்தி சிவநாதன், வருணானந்தா, விஜயபவானந்தா ஆகியோரின் தந்தையும்,

கௌரீஸ்வரி சிவானந்தா, முத்துக்குமாரு சிவநாதன், தவநாயகி வருணானந்தா, டிலக் ஷா விஜயபவானந்தா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான காமாட்சி பரமலிங்கம், சிவகாமசுந்தரி சதாசிவம், வாலாம்பிகை அருள்லிங்கம், பராசக்தி சிவநாதன் ஆகியோரின் இளைய சகோதரனும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் சபாநாதன், ஸ்ரீகாந்தா, உஷாதேவி செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,

சித்தரஞ்சன் (கனடா), சிந்துராரணி (கனடா), நந்தகோபன் (இங்கிலாந்து), சாய்சங்கர் (இங்கிலாந்து), சாயினி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் காரைநகர் நீலிப்பந்தனையில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் (03.07.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி, பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் காரைநகர் கசூரினா கடற்கரை அருகில் உள்ள சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
ந.ஸ்ரீகாந்தா (சட்டத்தரணி)

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro