திரு. வைத்திலிங்கம் ரவீந்திரன் (ரவி)

மலர்வு

28.10.1964

உதிர்வு

29.07.2022

ஏழாலை மேற்கு – மல்லாகம்

(உரிமையாளர் – சயன் உணவகம், மல்லாகம் சந்தி)

ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ரவீந்திரன் அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

சியானி (ஜேர்மனி), நிஷானி, பிரசன்னா (வலிவடக்கு பிரதேச சபை), தனஞ்சயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தஜநாதன் (ஜேர்மனி), கிறேஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யவின் (ஜேர்மனி), ரூதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இந்திரா, சிறிதரன் மற்றும் மனோகரன் (மன்னார்), தயாபரன் (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் வசந்தகுமாரி (லண்டன்), யோகேஸ்வரி (மன்னார்), புஸ்பராணி (நோர்வே), காலஞ்சென்ற அருந்தவநாயகி (ஆசிரியை) மற்றும் சிறிதரன், சுகிர்தன் (தவிசாளர் வலி வடக்கு பிரதேச சபை), பிரபாகரன் (மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01.08.2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் மல்லாகம் சந்தியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சுகிர்தன் (மச்சான்)
(தவிசாளர் வலி வடக்கு பிரதேச சபை)

தொடர்புகளுக்கு :
தஜன் (மருமகன்) – 004917634165079
தயா (சகோதரன்) – 004792287360
சுகிர்தன் (மச்சான்) – 0094770279676
பிரசன்னா (மகன்) – 0094774539812

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro