திருமதி. கமலாம்பிகை தர்மலிங்கம் (லீலா)

மலர்வு

08.06.1928

உதிர்வு

03.08.2022

அரியாலை – நோர்வே

யாழ். அரியாலை கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நோர்வே Trondheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை தர்மலிங்கம் அவர்கள் கடந்த 03.08.2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, கனகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை தர்மலிங்கம் (புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், கோணேஸ்வரன் (நோர்வே), காலஞ்சென்ற ரதீஸ்வரன் (மாவீரன் தோமஸ்), சாந்திமதி கேதீஸ்வரன் (ஜேர்மனி), நகுலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாரதா (நோர்வே), கேதீஸ்வரன் (ஜேர்மனி), சுமித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற நேசமணி, இராசமணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விசாகன், விபுலன், சாரங்கன் (நோர்வே) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சயந்தன், சனந்தன், விமலி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பானுஜா விசாகன் அவர்களின் அன்புப் பேத்தியும்,

அர்ச்சன், அமீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், செல்வநாயகம், சிங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவளராணி அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

கிரியை :
Wednesday, 10 Aug 2022 10:00 AM
Trondheim frikirke Brøsetvegen 145A, 7048 Trondheim, Norway.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கோணேஸ்வரன் (மகன்)

தொடர்புகளுக்கு :
கோணேஸ்வரன் (மகன்) – 004791135903
நகுலேஸ்வரன் (பாபு, மகன்) – 0016475759589
சாந்திமதி (மகள்) – 004915228718605

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro