திருமதி. பரநிருபசிங்கம் இராசம்மா (செல்லம்மா)

மலர்வு

18.02.1934

உதிர்வு

19.08.2022

புங்குடுதீவு – கொழும்பு

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் இராசம்மா அவர்கள் 19.08.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரநிருபசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற தவயோகராசா, பரமேஸ்வரி (பிரான்ஸ்), யோகேஸ்வரி (பிரான்ஸ்), இராஜகோபால் (சுவிஸ்), சத்தீஸ்வரி (இலங்கை), உலகநாதன் (சுவிஸ்), அமிர்தலிங்கம் (கனடா), மாணிக்கராசா (நோர்வே), மோகனேஸ்வரி (சுவிஸ்), கனகலிங்கம் (சுவிஸ்), ஜெகதீஸ்வரி (சுவிஸ்), மங்களேஸ்வரி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கில்டா (இலங்கை), குணரெட்ணம் (பிரான்ஸ்), குமாரகுலசிங்கம் (பிரான்ஸ்), நாகேஸ்வரி (சுவிஸ்), காலஞ்சென்ற இராசரெட்ணம், யோகம்மா (சுவிஸ்), கெங்காதேவி (கனடா), வசந்தலதா (நோர்வே), காலஞ்சென்ற பத்மநாதன், சுசியானந்தி (சுவிஸ்), முருகானந்தன் (சுவிஸ்), விஷ்வநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசையா, தனபாக்கியம், காலஞ்சென்ற கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அம்பலவாணர் அருணாசலம், நல்லதம்பி, சுந்தரிபிள்ளை மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குணம் (மருமகன்)

தொடர்புகளுக்கு :
கோபால் (மகன்) – 0041793928533
குணம் (மருமகன்) – 0033651921826
லிங்கம் (மகன்) – 0016479952989
சந்திரன் (மகன்) – 004790557879

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro