திரு. தம்பிஐயா இராசரட்ணம்

மலர்வு

05.04.1930

உதிர்வு

30.08.2022

தென்மயிலை கட்டுவன் – கனடா

இளைப்பாறிய ஆசிரியர்)

தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் திரு.தம்பிஐயா இராசட்ரணம் அவர்கள் 30.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான, தம்பிஐயா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சபாரட்ணம், அன்னம்மா, சின்னத்துரை, நல்லம்மா, பரமேஸ்வரி, பரராஜசிங்கம் மற்றும் புவனேஸ்வரி (கனடா), ஞானவள்ளி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பவளம்மாவின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விஜகுமார் மற்றும் சந்திரகுமார் (நெதர்லாந்து), சிவகுமார் (பிரான்ஸ்) பிறேம்குமார் (அவுஸ்திரேலியா), கௌரி (கனடா), இராசகுமார் (கனடா) காலஞ்சென்ற இராம்குமார் மற்றும் மாலதி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரஞ்சனா, கௌரி, இரதி, கோமதி, சிவராஜசிங்கம், சுபோதினி, ரஜனி, ரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜனன், கிசான், அனுசாந், ஜெகந்தன், நிருபன், இலட்சன், சிவானி, பிரகாஸ், பிரியா, அரவிந், ஆசா, ஐஸ்மிகா, தானியா, அபிசேக், திபிகா, டிசானா, அபிர்னா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அனையிலாவின் அன்பு பூட்டனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் PLACE- 55, Rue Gince, Montreal, Québec H4N 1j7 எனும் முகவரியில் (03.09.2022) சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிமுதல் பிற்பகல் 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் (04.09.2022) ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை கிரிகைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மோகன் (கனடா) – 0016137629326
கௌரி (கனடா) – 0016479246605
அல்லி (கனடா) – 004388755667

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro