திரு. நாகேசு கந்தசாமி

மலர்வு

02.03.1950

உதிர்வு

05.09.2022

மானிப்பாய் – யாழ்ப்பாணம்

மானிப்பாய் வடகிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகேசு கந்தசாமி அவர்கள் (05.09.2022) திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகேசு சிவக்கொழுந்து தம்பதியரின் பாசமிகு தவப்புதல்வனும்,

கந்தையா செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

தங்கமலர் (மனோகரி) அவர்களின் அன்புக் கணவரும்,

தாட்சாயினி (ஆசிரியர், யாழ்.இந்துக் கல்லூரி), நிசாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கமலர், தங்கராணி, மனோன்மணி, சந்திரராணி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தியாகராசா, நாகலிங்கம் மற்றும் இரத்தினம் சந்திராதேவி, காலஞ்சென்ற அருந்ததி, தங்கராசா, அரியமணி, காந்திமலர், மகேந்திரராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (07.09.2022) புதன்கிழமை அன்று மு.ப. 8.30 மணியளவில் மானிப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
077 684 5842
077 745 7685

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro