திரு. கந்தையா வேலாயுதபிள்ளை

மலர்வு

14.09.1937

உதிர்வு

12.09.2022

யாழ்ப்பாணம் – வரணி

யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட, திரு. கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 2022.12.09 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா,  வள்ளியம்மை மண இணையரின் பாசமிகு மகனும், கண்டாவளையைச் சேர்ந்த, காலஞ்சென்ற சித்தர் குமாரவேலு, சின்னப்பிள்ளை மண இணையரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பராசக்தியின் பாசமிகு கணவரும்,

விஜயகுமார் (இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முன்னாள் நடத்துனர்), சுகுணகுமாரி, வேணுகுமாரி (முன்னாள் ஆசிரியை, கிளி/முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி), காலஞ்சென்ற பகீரதகுமார் ( மூத்த தளபதி பிரிகேடியர் தீபன்), மற்றும் சிவஞானகுமாரி (ஆசிரியை- யா/வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற சிவகுமார் (லெப்.கேணல்.கில்மன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனந்தநீலா, அனந்தசேகரன், லோகநாதன், குமாரி, சிறீதரன் (பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்)
ஆகியோரின் மாமனாரும்,

கோபினா, கோபிசன், அனோஜா, சிறிதரன், அஜிந்த், கீர்த்தனா, அருணியா, அஜந்தூரன், லக்சன், லக்சனா, சாரங்கன், பிரணவன், பிரவீனன், ஆர்த்தி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு பேரனும், அஞ்சனா, ஆசா, அஸ்மி, அகானா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், முரசுமோட்டையில் அமைந்துள்ள அவரது மூத்தமகனின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக, அன்னாரின் குடும்ப மயானமான யாழ் வரணி-குடமியன் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro