திரு.செல்லத்துரை ஸ்ரீ காந்திதாசன்

மலர்வு

உதிர்வு

யாழ் – நெதர்லாந்து

அம்பாறை அக்கரைப்பற்று பளையைப் பிறப்பிடமாகவும்,
நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஸ்ரீ காந்திதாசன்
அவர்கள் 10-12-2022 சனிக்கிழமை அன்று

நெதர்லாந்தில் காலமானார்.அன்னார்,
அக்கரைப்பற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற
செல்லத்துரை(முன்னாள் கிராமசேவகர்),
தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தம்பிமுத்து பூரணம்(பளை)
தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருள்தேவி அவர்களின்
அன்புக் கணவரும், நகுலினி, பிரகதீஸ்,
நளாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகுதினி, சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின்
அன்பு மாமனாரும்,பிரணவ் அவர்களின்
அன்புத் தாத்தாவும்,இராமநாதன்(கல்லடி- மட்டக்களப்பு),
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவபாதசுந்தரம்
மற்றும் சரஸ்வதி(அக்கரைப்பற்று), மங்கயற்கரசி(கோளாவில்),
துளசிமலர்(அக்கரைப்பற்று) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி(லண்டன்), கோபாலகிருஷ்ணன்(லண்டன்),
கிருபாலட்சுமி(லண்டன்), இராஜலட்சுமி(லண்டன்),
விஜயலட்சுமி(லண்டன்), திருமகள்(லண்டன்),
ஸ்ரீஸ்கந்தராஜா(கொக்குவில்), உதயமலர்(லண்டன்),
கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான சவுந்தராசா,
விக்கிரமசிங்கம், பங்கயநாதன் மற்றும் பாலிப்போடி
ஆகியோரின் மைத்துனரும்,காராளசிங்கம், யோகநாதன்,
வன்னியசிங்கம், மகேந்திரலிங்கம், சுப்பிரமணியம்,
கஜேந்திரன் ஆகியோரின் சகலனும்,பரமேஸ்வரி,
நிர்மலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.19 ஆம் திகதி
நண்பகள் 3.30 மணியளவில்,
9084 கௌதம் ,நெதர்லாந்து நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கண்ணன் மைத்துனர்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro