யாழ்-பிரான்ஸ்
யாழ். மின்சாரநிலைய வீதியைப் பூர்வீகமாகவும், பிரான்ஸை கடந்த 40 வருடங்கள் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புவனேஸ்வரி அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 95-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா(சிறைக்காவலர்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், செந்தில்நாதன் மற்றும் குணராசா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், துவாரகாதேவி, ரதிதேவி, சிறிகாந்தசிங்கம் ஆகிய நால்வரின் அன்புத் தாயாரும்,
மேர்ளின் ரோஸ்மணி, காசிலிங்கம்(ஈழாநாடு), தெய்வேந்திரம், தில்லைநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதேசபவன்(குமார்), கல்யாணி, ரோகிணி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபவன், கணேசபவன் மற்றும் முரளிஸ்வரபவன், சரத்பவன், ராகினி, கலைச்செல்வி, அருட்செல்வி, அரவிந்தன், முகுந்தன், சிவச்செல்வி, இந்திராதேவி, கஜேந்திரன், ரவீந்திரன், சிவேந்திரன், வசீகரன், சர்மிளா, கயானா ஆகிய இருபது(20) பேர்களின் அன்புப் பேத்தியும்,
சஹீரா, கதிர், அசோக், தர்மிலா, மிதுலா, நிசாலா, நதீஸ், பூமிகா, பூவிதன், பூர்த்திகன், ஜீவிதன், ஜோதிகா, தீபன், செந்தூரி, ஆரவி, தன், ஆதிகன், யாழன், அஜனி, வைதீகன், இந்துஜா, ஜனகன், கீயான், கீர்த்தன், நிசாந், சியான், சனையா, சுருதி, சைனி, சஸ்வின், சச்சின், சாயகன், சாயிதன் ஆகிய முப்பத்துமூன்று(33) பேர்களின் அன்புப் பூட்டியும்,
அனுஷ்டன், காபின் ஆகிய இரண்டு பேர்களின் பாசமிகு கொள்ளுப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 22.03.2023 அன்று நண்பகல் 12.00 முதல்
4.00 மணியளவில் பிரான்ஸில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்